கரைபுரளும் ஊழல்களால் திணறும் காமராஜர் பல்கலை!!

மதுரை காமராஜர் பல்கலையில், துணை வேந்தர், பதிவாளர் இல்லாத நிலையில், கரை புரளும் ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியாமல், உயர்கல்வி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

காமராஜர் பல்கலையின் துணை வேந்தராக இருந்த, கல்யாணி மதிவாணனின் பதவி, 2015 ஏப்ரலில் முடிந்தது. புதிய துணை வேந்தர் நிய மிக்கப்படும் வரை, நிர்வாகத்தை கவனிக்க, பதிவாளர்
முத்துமாணிக்கத்துக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டது.

அவரது நேர்மையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பலர், உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம், பல நெருக் கடிகளை கொடுத்தனர்.

பின், மறைமுக நெருக்கடியால், முத்து மாணிக்கம், 2016 ஜூலையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த விஜயனிடம், பதிவாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால், விஜயனின் நிர்வாகத்தில், காமராஜர் பல்கலை யில் அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் எழுந்துள் ளன. இது குறித்து, கவர்னர் அலுவலகம், உயர்
கல்வி செயலகம், முதல்வரின் தனிப்பிரிவில், புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


இது குறித்து, உயர்கல்வி வட்டாரங்கள் கூறிய தாவது: துணை வேந்தரும், பதிவாளரும் இல்லாத தால், காமராஜர் பல்கலை நிர்வாகம் கேட்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக, உயர்கல்வி செயலர் கார்த்திக் உள்ளார். அவர், சென்னையில் உள்ள தால், உயர்கல்வி செயலர் பெயரை பயன் படுத்தி,பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.



*விதிகளை பின்பற்றாமல், பல்கலையில் ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மொத்தமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது


* இணைப்பு கல்லுாரிகளின் ஆசிரியர் நியமனத்திற் காக, கல்வித் தகுதி அனுமதி சான்றிதழுக்கு, பதிவாளர் அலுவலகம் வரை, லட்சக்கணக்கில், 'கவனிக்க' வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது


*பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், தற்காலிக அடிப்படையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, இடைத்தரகர்கள் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. பணியிட மாற்றத்திற்கும், அதே போன்று பேரம் பேசப்பட்டுள்ளது


*எம்.பி.ஏ., மற்றும்எம்.பில்., மாணவர் சேர்க்கை யில், சரியான கல்வித் தகுதி பார்க்காமல், கூடுதல் பணம் வசூலித்து, தாமத மாணவர் சேர்க்கை நடத் தப்பட்டுள்ளது

*பல்கலை தேர்வில், கல்லுாரிகள் சிலவற்றில்,

.மாணவர்கள் கூட்டாக காப்பி அடித்துள்ளனர்.

இதற்கு, பல்கலை நிர்வாகத்தில், சிலர் உடந்தையாக இருந்ததாக, புகார் எழுந்துள்ளது இது குறித்து, மதுரை கலெக்டர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.இது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால், காமராஜர் பல்கலை திணறி வருகிறது. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, கல்வியாளர் கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.



புதிய அதிகாரியை நியமிக்க முடிவு!



காமராஜர் பல்கலை நிர்வாகத்தை நடத்தும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விஜயன் பதவி, பிப்., 8ல் முடிகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு பெற, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தரப்பில், சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், நேர்மையான பேராசிரியர்களை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், பதிவாளர் பொறுப்பிலும், புதிதாக நியமிக்க, கவர்னர் அலுவலகம் உத்தர விட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...