அலங்காநல்லூரில் தடையை மீறி நடந்த போராட்டம் நள்ளிரவையும் கடந்து நீடித்தநிலையில் நள்ளிரவில் தடியடி நடத்திய போலீசார், சுமார் 240 இளைஞர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்துவைத்துள்ளனர்.
ஆனால் கைது செய்துள்ள இளைஞர்களை விடுவிக்கக் கோரி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் இப்போது வரை போராட்டங்களை தொடர்ந்து
வருகிறார்கள்.
தங்களது ஊருக்கு வந்து தங்களுக்கு ஆதரவாகவும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அலங்காநல்லூர் பொதுமக்கள், பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எஸ்.பி விஜயேந்திர பிதாரி:
பொதுமக்கள் மத்தியில் பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்றும், விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் எஸ்.பி. உறுதியளித்தார். அமைதியான போராட்டத்துக்கு போலீஸ் ஒத்துழைப்பு அளித்துவருவதாகவும் விஜயேந்திரா பிதாரி கூறினார். ஆனால் மாவட்ட எஸ்.பி.யின் சமாதான பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இதனால் இன்றும் அலங்காநல்லூர் போர்க்களமாக மாறியுள்ளது. பதற்றம் அதிகரித்தது.
போலீசார் பேச்சுவார்த்தை:
இந்தப் போராட்டத்தில் நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ஈடுபட்டார். போராட்டம் தீவிரமடையவே, ஆர்.கே.சுரேஷ் உடன் உள்ளூர்வாசிகள் 10 பேரை சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் முன்னிலையில் மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரா பிதாரி உறுதியளித்துள்ளார். கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்து அழைத்து வரும் வரை பொதுமக்கள் இங்கிருந்து நகர வேண்டாம் என்று கூறிவிட்டு, 10 பேர் பேச்சுவார்த்தைக்குச் சென்றுள்ளனர். இளைஞர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் அங்கு முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். அலங்காநல்லூரில் மட்டுமல்லாது, சென்னையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன.