நோ மேக்கப், நோ ஜீன்ஸ்: கட்டுப்பாடுகளை இறுக்கும் மருத்துவமனை!!

திருவனந்தபுரம் வட்டப்பாறையில் உள்ள எஸ்யூடி மருத்துவ அறிவியல் அகாடமியில், ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஊழியர்கள் புடவை மட்டுமே அணிய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கடந்த திங்கள்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையைப் படித்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



செவிலியர்கள், உதவியாளர்கள், ஹவுஸ் கீப்பிங் செய்பவர்கள் என அனைவருக்கும் ஆடைக்கட்டுப்பாடு பொருந்தும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் போது எந்த மாதிரியான புடவை மற்றும் எந்த மாதிரியான ஜாக்கெட்டை உடுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது நிர்வாகம். எனவே, மெலிதான புடவைக்கு அனுமதியில்லை. அதேபோல் குறைந்த கழுத்தளவு கொண்ட ஜாக்கெட்டை அணிய வேண்டும்.

மேலும், ’மேக் - அப் போடக் கூடாது. தலையில் பூ வைக்கக் கூடாது. தலையை நன்றாக பின்னியிருக்க வேண்டும். ஹை ஹீல்ஸ் காலணி அணியக் கூடாது, அதிக ஆபரணங்கள் அணியக் கூடாது. பணி நேரத்தில் யாரும் செல்பேசி பயன்படுத்தக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஊழியர் கூறியதாவது, ’நாங்கள் சுடிதார் அணிந்து வரவே விரும்புகின்றோம். சுடிதார் அணிந்திருந்தால் பணிபுரியும்போது எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். புடவை அணிவது எந்தவிதத்திலும் செளகர்யமாக இருக்காது. இதற்கு முன் நாங்கள் சுடிதார் அணிந்தே பணிக்கு வந்துகொண்டிருந்தோம். நிர்வாகத்துக்கு நாங்கள் சுடிதார் அணிவதில் என்ன பிரச்னை உள்ளது என தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர் என நியூஸ் மினிட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம்தான் முற்போக்கான மாநிலம் என்று கூறப்படுகிறது. ஆனால், அம்மாநிலம் சமீபகாலமாக பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுத்தது உள்பட பல விமர்சனத்துக்குரிய கட்டுப்பாடுகளை விதித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...