முழு மதிப்பெண் பெறும் அரசு விடுதி மாணவ-மாணவியருக்கு ஊக்கத் தொகை !!

பொதுத் தேர்வுகளில் முழு மதிப்பெண் பெறும் அரசு விடுதி மாணவ-மாணவியருக்கு ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி மாணவர், மாணவியருக்கான அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வோரை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.



அதன்படி, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க அரசு அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
எனவே, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு பள்ளி விடுதிகளில் தங்கி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத் தேர்வுகளில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் அரசின் ஊக்கத் தொகையான ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...