ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5௦௦, 1௦௦௦
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.இதனால் நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது என கூறியுள்ளார்.
புத்தாண்டு பிறப்பை ஒட்டி, மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது,
பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுத்தியுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏழைகள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை எதிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது தான். உள்நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.