பதவி உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குனர், உதவி இயக்குனருக்கு தகுதிவாய்ந்த
அலுவலர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் பதவி உயர்வு வழங்குவது தாமதமாகிறது. ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கூடுதல் பணி மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இவர்களுக்கு கூடுதல் படி வழங்க வேண்டும். துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக நடந்த போராட்டத்தின் போது, நடவடிக்கை எடுப்பதாக, துறை செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது; ஆனால், இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
கும்பகோணத்தில் ஜன., 21ல் மாநில செயற்குழு கூடுகிறது. இதில் போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.