மேலச்செல்வனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது.
கடலாடி அருகே மேலச்செல்வனுார் அரசு உயர்நிலைப்பள்ளியும், தொடக்கப்பள்ளியிலும் ஒரே வளாகத்தில் செயல்படுகிறது.
அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, பள்ளி வளாகம் திறந்தவெளியாக உள்ளதால் கால்நடைகள், நாய்கள் ஓய்வெடுக்கும் கூடாரமாக விளங்குகிறது.
மேலச்செல்வனுார் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில் 70 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உள்ளனர். அதே வளாகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்புகளில் 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
10 ஆசிரியர்கள் உள்ளனர். மேலச்செல்வனுார், சாத்தங்குடி, வெள்ளாளங்குளம், பாடுவானேந்தல், எம்.எஸ்.புதுக்குடியிருப்பு, ஆலங்குளம், தேரங்குளம், கடையங்குளம் உள்ளிட்ட 15 கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இங்கு வகுப்பறை கட்டம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இதனால, இடப்பற்றாக்குறையால் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். வெயில் காலங்களில் மரத்தடி நிழலிலும், மழை நேரத்தில் நெரிசலான நிலையில் வகுப்பறைக்குள்ளும் பாடம் நடத்தும் அவல நிலை தொடர்கிறது.
இரண்டு பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் இல்லாததால் தெரு நாய்கள் ஓய்வெடுக்கின்றன. ஆடு, கோழி, மாடுகள் சர்வ சாதாரணமாக பள்ளி மைதானத்தில் திரிகின்றன. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
மேலச்செல்வனுார் கிராமத்தை சேர்ந்த எஸ்.உலகநாதன் கூறுகையில், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஒருங்கிணைந்த இடத்தில் சுற்று சுவர் இல்லாமல், திறந்தவெளியாக உள்ளதால் இங்கு குடிமகன்கள் இரவு நேரங்களில் மது அருந்தும் நிலை உள்ளது.
காலி மது பாட்டில்கள், கால்நடைகளில் கழிவுகளை தினமும் சுத்தம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். பள்ளி அருகில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் திறந்த வெளியை நாடும் நிலையில் உள்ளனர்.
தண்ணீர் வசதியும் இல்லை. வகுப்பறை பற்றாக்குறையால் அருகில் உள்ள கலையரங்கில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். அரசுப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யவும், கூடுதல் வகுப்பறை கட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.