ஜல்லிகட்டிற்காக தமிழகம் முழவதும் போராட்டம் தீவிரமாக பரவி வருகிறது. அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் அடுத்தடுத்து சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய போராட்டம் நடந்து வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை முடிந்து இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஜல்லிகட்டிற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த வர வேண்டும் என சமூக வலைதளங்களில் அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
*மாணவர் பேரணி*
இன்று காலை மாணவர்கள் கலந்து கொள்ளும் பேரணி ஒன்று மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை ஆரப்பாளையம் முதல் கோரிப்பாளையம் வரை பேரணி நடத்தப்படவுள்ள இந்த பேரணியில். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற உள்ளது.
*வழக்கம் போல் செயல்படும்*
ஜல்லிகட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை அறிவித்திருந்தாலும் கல்லூரி அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் மாணவர்கள் தீவிரமாக களமிறங்கும் பட்சத்தில், கல்லூரிகள் இயங்குமா என்பது கேள்விக்குறி தான்.