கேரளாவில் ரேஷன் கடைகளுக்கு 'ஸ்வைப்பிங் மிஷின்!!!

கேரளாவில், 14,500 ரேஷன் கடைகளுக்கு, 'ஸ்வைப்பிங் மிஷின்' வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்வைப்பிங் மிஷின்:


கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்; இங்கு, ரேஷன் கடைகள், ஏற்கனவே, மின்னணு தொழில்நுட்பத்தில்,
இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செல்லாத நோட்டு பிரச்னையில், மக்கள் தவித்து வருவதால், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், 14 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளுக்கு, 'ஸ்வைப்பிங் மிஷின்' வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், பொருட்களுக்கான கட்டணத்தை, 'டெபிட் கார்டு' மூலம் மக்கள் செலுத்த முடியும். இதுமட்டுமின்றி, இந்த இயந்திரங்களை, மைக்ரோ, ஏ.டி.எம்.,களாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறிதளவு சேவை கட்டணம்:

அதன்படி, வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க விரும்பும் ஒருவர், இதில், தன் வங்கி கணக்கில் இருந்து, ஸ்வைப் செய்து, ரேஷன் கடை ஊழியரிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள முடியும்; இதற்காக, ரேஷன் கடைக்கு, சிறிதளவு சேவை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். விரைவில், இந்த திட்டம் அமலாகவுள்ளது. கிராமப்புறங்களில், அதற்கு தேவையான இணையதள வசதி குறித்து ஆய்வு செய்யும்படி, மாநில உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...