நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு*.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சில முக்கியப் பிரமுகர்கள் ரஞ்சித் சின்ஹா சிபிஐ இயக்குநராக இருந்தபோது, அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்ததாக புகார் எழுந்தது. அவரது வீட்டு வருகைப் பதிவேட்டில் இதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து சின்ஹா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, இதன் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத் தது. இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் நீதிமன்றம் வழங்கியது.
இதைப் படித்துப் பார்த்த ரோத்தகி, கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி, நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, “நிலக்கரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்துப் பேசி உள்ளனர். இது முற்றுலும் பொருத்தமற்றதாக உள்ளது. இதன்மூலம் நிலக்கரி ஊழல் வழக்கை திசைதிருப்ப முயற்சி நடந்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.