சொந்தக் கட்சியினரே 'சூனியமா?' ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு பற்றி முதல்வர் வருத்தம் !!

 என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சொந்தக் கட்சியினரே இப்படி செய்கின்றனரே என, அ.தி.மு.க., மூத்த தலைவர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம், வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், மூன்றாவது முறையாக தமிழக

முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பன்னீர்செல்வம், அதன் பின், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்னை வந்து, முதல்வர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார். சரியான தூக்கம் இல்லை என்றும் புலம்பிக் கொண்டிருந்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னை தீவிரமாக தலை தூக்கிய பின், சில மணி நேர தூக்கத்தையும் இழந்திருப்பதாகச் சொல்லி வருந்துகிறார்.

முள் படுக்கை: இரண்டு நாட்களுக்கு முன், அவரை சந்தித்தபோது, தற்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரொம்பவும் புலம்பித் தீர்த்து விட்டார். முதல்வர் பதவி என்பது முள் படுக்கை என்பது ஏற்கனவே நான் அறிந்ததுதான். ஆனாலும், அது என்னைத் தேடி வரும்போது, என்னால் அதை தவிர்க்கவும் முடியவில்லை; தட்டியும் விடவில்லை. தமிழகத்துக்கான தேவைகள் அதிகம் உள்ளன.

இந்த சூழ்நிலையில், வேறு யாரிடம் ஆட்சிப் பொறுப்புப் போனாலும், அது தமிழக நலன்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே சென்று விடும் என, தமிழக நலன் மீது அக்கறையுள்ள, என் வீட்டு முதியவர் ஒருவர் சொல்லி, முதல்வர் பொறுப்பை மறுக்கக் கூடாது என கூறியுள்ளார். அதன் அடிப்படையில்தான், மூன்றாவது முறையும், முதல்வர் பதவி என்னை தேடி வந்த போது அதை தவிர்க்க முடியவில்லை.நான் பதவி ஏற்ற நாளில் இருந்தே, சொந்தக் கட்சியில் இருந்தே, எனக்கு நாலா பக்கமும் நெருக்கடி கொடுக்கின்றனர். சொந்தக் கட்சிக்காரர்களே, என்னை முதல்வர் பதவியில் இருந்து விலகச் சொல்லி, அறிக்கையும்; பேட்டியும் கொடுத்த போது, நொறுங்கிப் போய் விட்டேன். வேண்டாம் இந்த பொறுப்பு; விலகி விடலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.ஆனால், குடும்பத்து மூத்தவர் விருப்பம் நிறைவேறாமல் போய் விடும் என்பதால், எக்காரணம் கொண்டும், முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

அதன்பின் தான், முதல்வர் பொறுப்பில் இருந்து வேகமாக செயல்படுவது என முடிவெடுத்தேன்.வார்தா புயல் நேரத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைப்போடு அதை திறம்பட சமாளித்ததில், மற்ற மாநிலங்களும்; மத்திய அரசும் பாராட்டியது. அப்பவே, சொந்தக் கட்சியில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. பல்வேறுவிதமான இடைஞ்சல்களை கொடுத்தனர். இருந்த போதும், இதுதான் அரசியல்; இதுதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கை என இருந்து விட்டேன்.

ஜல்லிக்கட்டு பிரச்னை: ஜல்லிக்கட்டு பிரச்னையிலும் பிரதமரிடம் பேசினேன்; பின், சந்தித்தேன். இரண்டு தரப்பிலும் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். பிரதமர் மோடி, ஆத்மார்த்தமாக செய்த உதவியின் அடிப்படையில், தமிழக அரசு சார்பி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, அதை தமிழக சட்டசபையிலும் நிறைவேற்றி இருக்கிறோம்.இந்நிலையிலாவது, இளைஞர்கள் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொளவர் என நினைத்தால், அவர்கள் மறுத்தனர். காரணம் - அவர்கள் போராட்டம் வாபஸ் ஆகி விட்டால், ஜல்லிக்கட்டு விஷயத்தில் மொத்த பெருமையும்; அதனால் கிடைக்கும் பலன்களும் எனக்கு கிடைத்துவிடும்.

எதிர்காலத்தில், முதல்வர் பதவியில் நான் நிலைத்துவிடுவேன் என்ற பயத்தில், சொந்த கட்சியினரே, போராட்ட களத்தில் நின்ற மாணவர்களை; இளைஞர்களை தூண்டி விட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதன் பின்னணி குறித்தும் விசாரிக்க ரகசியமாக உத்தரவிட்டுள்ளேன்.இருந்தாலும், சொந்தக் கட்சியினரே, என்னை நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல், துரத்தி துரத்தி துரோகம் செய்வது மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக, முதல்வர் பதவியை நினைத்ததும், கொடுத்து விட்டுப் போய் மூலையில் அமருவதற்கு, ஜெயலலிதா காலத்து பன்னீர்செல்வமல்ல தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் என கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.⁠⁠⁠⁠

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...