CPS களைய கோரியும்,இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்தும் ,7 வது ஊதியக்குழு அமைக்க வலியுறுத்தியும் SSTA முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு !! ( பின்னேற்பில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படாது )

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.                                    நேற்று (06/01/2017) காலை மாண்புமிகு பள்ளிகல்விதுறை அமைச்சர் திரு. மாபா.பாண்டியராஜன் அவர்களை SSTA மாநில பொறுப்பாளர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு நமது சங்கத்தின் நாள்காட்டி மற்றும் நாற்குறிப்பு வழங்கப்பட்டது.  இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை குறித்த அனைத்து விபரங்களையும் கோப்பாக மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் இது பற்றி விவாதிக்க அமைச்சர் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .பின்னர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் இல்லாததால் ,முதலமைச்சர் தனிப்பிரிவில்  CPS களைய கோரியும்,இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்தும் ,7 வது ஊதியக்குழு அமைக்க வலியுறுத்தியும் SSTA வின் மனு அளிக்கப்பட்டது

அதனைதொடர்ந்து நிதித்துறை முதன்மை செயலாளர்,துணை மற்றும் இணை செயலர்கள் ,கல்வித்துறை முதன்மை செயலர் அலுவகத்திலுள்ள மற்ற அலுவலர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதோடு *SSTAவின் சாதனைகள் அடங்கிய காலண்டர்* வழங்கப்பட்டது.


*🌹🌹மாலை                         தொடக்கக்கல்வி இயக்குநர் சந்திப்பு*

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதோடு SSTA வின் நாட்காட்டி மற்றும் டைரி வழங்கப்பட்டன.

பின்னர்  பின்னேற்பு குறித்து இயக்குநர் அவர்களிடம்
எந்தவொரு ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பின்னேற்பு வழங்க வழிவகை செய்துதருமாறு மிகவும் அழுத்தமாக SSTA சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு இயக்குனர் அவர்களும் பின்னேற்பு குறித்து ஆசிரியர்களிடமிருந்து விளக்கக் கடிதம் பெற்று பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இயக்குனர் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாரு பின்னேற்பு ஆணை பெறும் வரை SSTA தொடர்ந்து வலியுறுத்தி வெற்றிபெறும் ".                         நீதி மன்றம் சென்று இ.ஆ வழக்கை துரிதப்படுத்தவும் ஏற்படும் இடர்பாடுகளை களையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எண்ணிய காரியங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி !!
எதிலும் வெற்றி
என்றும் வெற்றி!!
அதுவே SSTA-வின் தாரக மந்திரம்!!!

என்றும் ஆசிரியர்களுக்காக...
உங்கள் *🌹SSTA🌹*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...