ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டார SSTA பொறுப்பாளர்கள் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களோடு சந்திப்பு

இன்று(09/01/2017 )மாலை நமது சத்தியமங்கலம் SSTA வட்டாரப் பொறுப்பாளர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, நமது இயக்க SSTA காலண்டருடன், டைரியும் வழங்கி மகிழ்ந்தனர்.


நமது உறுப்பினர்களின் பணி பதிவேட்டில் விடுபட்டத் திருத்தங்களை விரைந்து சரி செய்து தரும்வண்ணம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
FPF, SPF, NHIS, CPS பிடித்தம் பதிவு குறித்த விளக்கம் கோரப்பட்டு தெளிவு பெறப்பட்டது.

தகுதி காண் பருவ காலத்தில் மலையேற்றம் இறக்கத்திற்கான பணியேற்பு இடைக்கால விடுப்பு(EL)
குறித்த தெளிவுரைகள் கேட்டு அறியப்பட்டது.தக்க ஆவண நகல்களுடன் அலுவலர்கள் இருக்கும் தக்க தருணங்களில் வந்து உரிய பதிவுகளை எவ்வித விடுதலுமின்றி பதிவு செய்து கொள்ளுமாறு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

கூட்டமாக வந்து சிரமமடையாமல் குறைந்த அளவில் வந்து பணியினைச்செம்மையாக முடித்துச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியல் உரிய திருத்தம் செய்து தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருமான வரி பிடித்தம்(IT) தொடர்பாக ஆடிட்டருக்கு வேண்டிய உதவிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.நாளை உதவி தொடக்கக் கல்வி அலுவலரையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கருத்துக்களைப் பரிமாறி பயன்பெறுவோம்.

குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதுபோன்ற ஆசிரியர்கள் நலன்சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வட்டார, மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்கள் விவாதித்தனர்.

நன்றி.
 "எண்ணங்கள் அழகானால் வண்ணங்களால் வாழ்வு
அழகோவியமாய் தோன்றும்"

பதிவு :
பா.அசோக்குமார்
SSTA வட்டார செயலாளர்
சத்தியமங்கலம். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...