கைத்தறி உதவி இயக்குனர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறையில், 14 உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பதவியில் தகுதியான நபர்களை நியமிக்க, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஏப்., 8ல் தேர்வு நடக்கிறது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிச., 15ல் துவங்கியது; ஜன., 12ல் முடிவதாக இருந்தது. தற்போது, நாளை வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.