குரூப்-1 தேர்வு : 37% பேர் பங்கேற்கவில்லை !!

தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது.



தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில், 749 தேர்வுக் கூடங்களில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. தனிப்பட்ட ஆய்வுப்பணிக்காக ஒரு தேர்வுக் கூடத்துக்கு ஒருவர் வீதம் 749 கண்காணிப்பாளர்கள் மற்றும் 749 தேர்வுக்கூட ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

குரூப்-1 தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 742 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1,18,688 ஆண்கள், 99,082 பெண்கள், திருநங்கைகள் 3 பேர் என மொத்தம் 2,17,773 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 146 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டன. அதில், 43,836 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தேர்வில் மொத்தம் 1,37197 (63%)பேர் பங்கேற்றனர். 80,576 பேர் (37%) பேர் தேர்வு எழுதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11,174 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அதில் நேற்று 7,345 பேர் மட்டுமே (65%) தேர்வெழுதினர். 3,829 (35%) பேர் தேர்வை எழுதவில்லை.

குரூப்-1 தேர்வு குறித்து தேர்வு எழுதியவர்கள், ‘பொது அறிவுக் கேள்விகள் எளிமையாக இருந்தன. ஆனால் கணக்கு மற்றும் அறிவியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்தன. தேர்வு எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...