பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, பிப்., 26க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 8ல் துவங்குகிறது.
அதில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பர். அவர்கள் விபரங்கள், விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளிகள் மூலம், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. தற்போது, அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு துறை இணையதளத்தில், பள்ளிகளுக்கு என வழங்கப்பட்டுள்ள யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட் பயன்படுத்தி, பிப்., 26க்குள், மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் இருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகலாம்.