விரைவில் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதி பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்த பிறகு, புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் மட்டுமே அதிகளவு புழக்கத்தில் இருப்பதால் மக்களுக்கு பெரும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, அவ்வப்போது ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 50, 20 ஆகிய நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், மகாத்மா காந்தி சீரிஸ் - 2005 அடிப்படையிலான புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி வரிசையில், ஆர் என்ற ஆங்கில எழுத்தின் தொடக்கத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியாகும். அவற்றில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெறும் புதிய ரூபாய் நோட்டில் 2017 என்ற ஆண்டு இடம்பெறும். பாதுகாப்புக் கோடுகளும், அடையாளக்குறியும் இடம்பெறும். ஏற்கனவே, புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முன்னதாக, விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறப்படும் என்றும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.