11 எம்.பி.க்கள் : ஓ.பி.எஸ்க்கு ஆதரவு ??

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்குமிடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் தமிழக அரசியல் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. சட்டப்பேரவையில் யார் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



இந்நிலையில், நேற்று மாலை அதிமுக எம்.பி.,க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்திய சூழ்நிலையில் இன்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் முதல்வர் பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆதரவு அளித்து வருகிறார். இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தயார் செய்து ஜெயலலிதாவிடம் ஒப்புதல் பெற்றபின்னர், அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அந்த அடிப்படையில் முன்னாள் எம்.பி., கே.பி.முனுசாமியின் ஆதரவாளரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தருமபுரி எம்.பி., அசோக்குமார் கடந்த 2 நாட்களுக்குமுன்பே பன்னீர்செல்வத்தின் பக்கம் வருவதாக இருந்தது. அப்போது, இன்னும் கூடுதலாக எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தால் அவர்களையும் அழைத்து வாருங்கள் என்று ஓ.பி.எஸ். தரப்பினர் கூறியதையடுத்து, அசோக்குமார் இதுகுறித்து டெல்லியில் பேசிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 11 எம்.பி.,க்கள் ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு கொடுக்கவிருப்பதாகவும் அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுக எம்.பி.,க்களை உடைக்கும் முயற்சியில் பாஜக தரப்பும் உதவி செய்வதாகத் தெரியவருகிறது. ஏனென்றால், அதிமுக இரண்டாக உடையும்பட்சத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் தமிழக அரசு செயல்படும்போது, தனக்கு சாதகமாக தமிழகத்தைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து, பிற எம்.பி.,க்கள் வரும்போது வரட்டும். முதலில் நீங்கள் வந்து ஆதரவு கொடுங்கள் என்று தகவல் தெரிவித்ததன்பேரில், நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் இன்று நேரில்வந்து ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் 9 எம்.பி.,க்கள் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் தெரிய வருகிறது.

ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்தபின்னர் சுந்தரம் எம்.பி., பேசுகையில், ‘ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக-வை வழிநடத்தும் தகுதி பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உள்ளது. முதற்கட்டமாக நாங்கள் வந்துள்ளோம். இரண்டாம் கட்டமாகவும் வருவார்கள். தம்பிதுரை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வருவார்கள். 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தார். 5ஆம் தேதி இரவு 11.3௦ மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததாகக் கூறினார்கள். அங்கே நடந்ததை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். ஜெயலலிதாவைப் பார்க்க மூத்த நிர்வாகிகளான எங்களை அனுமதிக்கவில்லை. சசிகலாவே துரோகி. பன்னீர்செல்வம் துரோகி இல்லை.’ என்று கூறினார்.

அசோக்குமார் எம்.பி., பேசுகையில், ‘அதிமுக-வின் பொதுச்செயலாளர் யார் என்று நாங்களே முடிவு செய்வோம். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி பன்னீர்செல்வத்தின் தலைமையின்கீழ் செயல்படுவோம். எம்.எல்.ஏ.,க்களை கட்டாயப்படுத்தி சிறைப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுக பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர், வீட்டு வேலைக்காரியாகத்தான் வந்தார்.’ இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...