2016-17ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. இதில் முதற்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் செய்முறை தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான பணிகளை கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுகள் துறை முடுக்கி விட்டுள்ளது. மார்ச் 2ம் தேதி மொழி பாடத்துடன் பிளஸ் 2
தேர்வுகள் தொடங்குகின்றன. தேர்வு அட்டவணையின்படி தேர்வு நாள்களில் தேர்வு காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாள் முதல்பக்கம் சரி பார்க்க ஒதுக்கப்படுகிறது. மார்ச் 31ம் தேதிவரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இதனிடையே மார்ச் 8ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தொடங்க உள்ளன.
பிளஸ்2 தேர்வுக்கு இன்னும் 10 தினங்களே உள்ளதால் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்வுக்கூட அரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 600 மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதுவோர் மற்றும் தனித் தேர்வர்கள் என சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 2500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு தரை தளத்தில் தேர்வுக் கூடம் அமைக்கப்படுகிறது. ஹால் டிக்கெட் அந்தந்தப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள்கள் மற்றும் முன்பக்க இணைப்பு தாள்கள் உள்ளிட்டவை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தொடர்பாக பறக்கும் படையினர் மற்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமையில் ஆலோசனை வழங்கும் கூட்டம் இந்த வாரத்தில் நடக்கிறது.