15 மாதங்களாக பதிலி ஆசிரியருக்கு ஊதியம் வழங்காமல் அலைகழிப்பு செய்யப்படும் நிகழ்வு திண்டுக்கலில் உள்ள ஆசிரியருக்கு நேர்ந்துள்ளது.
திண்டுக்கலில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் ஊதியமில்லா விடுப்பில் சென்ற ஆசிரியருக்கு பதிலாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சேசுராஜ் என்பவர் 03.11.2015 முதல் 30.10.2016 முடிய பதிலி ஆசிரியராகப் பணியாற்றினார்.
பணிக்காலத்தில் அவருடைய ஊதியம் தொடர்பாக கேட்டபொழுது மாதாமாதம் ஊதியம் வழங்க இயலாது என்றும் மொத்தமாக மட்டுமே வழங்க இயலும் என்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டு பணியை நிறைவு செய்தபின் ஊதியம் வழங்க சில ஆயிரங்களை செலவு செய்தபின் பல ஆயிரங்களை எதிர்பார்த்து கடந்த மூன்று மாதங்களாக அலைகழிப்பு செய்கின்றதோடு இல்லாத அரசாணைகளையும் விளக்கங்களையும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
10,000 ரூபாய் வழங்கினால் 10 நாளில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளருக்கு பணம் வழங்காததால் மூன்று மாதங்களாகியும் கோப்பினை கிடப்பில் போட்டுள்ளது நியாயம் தானா எனக் குமுறுகிறார் பாதிப்புக்குள்ளான ஆசிரியர்.
தமிழக அரசும் கல்வித்துறையும் கண்காணிப்பாளர் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமா?