அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என, பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 35,6700 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ,076 பேர் சேர்க்கப்படுவார்கள். அதன்பின்னர், உள்துறை அமைச்சகப் பணியாளர்கள் எண்ணிக்கை 24,778 ஆக அதிகரிக்கும்.
காவல் துறையில் 1,6000 பேர் புதிதாக இணைக்கப்படுவார்கள். அதன்பின்னர் இந்தத் துறையில் பணியாளர்கள் எண்ணிக்கை 11,13,689 ஆக உயரும்.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் 2,109 பேர் பணி அமர்த்தப்படுவார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறையில் 2,027 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.