மே.வங்கத்தில் பியூன் வேலைக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பம்!!!

 மேற்கு வங்க அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

மேற்கு வங்க மாநில தலைமை செயலகத்தில், பியூன் எனப்படும்,

அலுவலக உதவியாளர்களுக்கு, 6,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த பதவிக்கு, 40 வயதுக்குட்பட்ட, ஆரம்ப நிலை கல்வி தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மாத சம்பளம், 16,200 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டது.



விண்ணப்பிக்கும் காலக்கெடு முடிந்த நிலையில், 1.50 லட்சம் பட்டதாரிகள், 24 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகள் என, 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...