அய்யா வைகுண்டர் தினம் -
சாமிதோப்பு அய்யா அவதார நாளை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாள் விழா மார்ச் 4-ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி
மாவட்டங்களில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் தேர்வுகள் எதுவும் இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். கருவூலம் மற்றும் அனைத்து சார் நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.
நெல்லை மாவட்டத்தில் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 22-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.