ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பிறகு, வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் (சிபிடிடி) முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதிலும் உள்ள சுமார் 18 லட்சம் பேர் ரூ.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட்
செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மட்டுமின்றி, இந்த அறிவிப்பிற்கு பிறகு வங்கி கடன் பாக்கிபோன்றவற்றை ரொக்கமாக செலுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடன் பாக்கியை ரொக்கமாக செலுத்தியவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.