இன்னும் 7 நாளில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு !!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகவுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கடந்த மாதமே வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் விடுமுறையில் தேசிய முக்கியவத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் என்ற
காரணங்களால் தீர்ப்பு தள்ளி போனது.
இந்நிலையில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் எனவும் சொத்து குவிப்பு தீர்ப்பு எழுதப்பட்டு விட்டதாகவும் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனால் பரபரப்பு தோற்றி கொண்டுள்ளது சொத்து குவிப்பு விசாரணை நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதாகவும் அதற்கான தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி வந்தார்.

இதனை ஏற்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு எப்போது கர்நாடக அரசின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் தீரப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பதவியேற்பதற்கு முன்னதாகவோ பதவியேற்ற ஒரு சில நாட்களிலையோ இந்த தீர்ப்பு வரவுள்ளது.
இதில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவார்,
தற்போது ஜெ. தவிர்த்து சசிகலா இளாவரசி, சுதாகரன் ஆகியோருக்கே டென்ஷன்.
இந்த தீர்ப்பில் தான் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் மற்றும் பொதுவாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
இன்னும் 7 நாட்கள் மட்டும்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...