நீதிபதிகள் நியமனம் : மத்திய அரசு ஒப்புதல் !!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உட்பட 5 நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உட்பட 5 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசு மூலம் ஜனாதிபதிக்கு பரிந்துரை
செய்திருந்தது.தற்போது இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 31 ஆகும். ஆனால் தற்போது 23 நீதிபதிகள் தான் பணியில் உள்ளனர். மீதம் 8 காலி நீதிபதி பணியிடங்கள் உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் பொறுபேற்ற பின்பு, அவருடன் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர்,ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி இடங்களை நிரப்ப முடிவு செய்து புதிய பட்டியலை தயார் செய்தது. அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபன்குப்தா, கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகன் எம்.சந்தனகவுண்டர் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தது. வழக்கமான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதியாக உள்ளவர்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

இம்முறை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்காத நீதிபதி அப்துல் நஷிருக்கு சிறுபான்மை சமுகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வாய்ப்பளிக்கப்பட்டு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கடந்த 2014 ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

அவர் பதவியேற்றதிலிருந்து நீதித்துறையில் பல்வேறு நிர்வாக சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயரும்.

மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் இந்த நீதிபதிகள் பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின்னர் நீதிபதிகள் நியமனத்துக்கான வாரன்ட் இன்னும் ஓரிரு வாரங்களில் வந்துவிடும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே இந்த வருட இறுதியில் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வு பெறுகின்றனர். 2018 ஆம் ஆண்டில் 7 நீதிபதிகள் வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெறவுள்ளனர். எனவே வழக்குகள் தேங்காமல் இருக்க அடுத்தடுத்த நீதிபதி பணி நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பட்டியல் தயார் செய்ய வேண்டியிருக்கும்.

ஏற்கனவே நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கும் , மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...