இந்திய பல்கலை அணியில் திண்டுக்கல் மாணவிகள்


திண்டுக்கல்: சர்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் இந்திய பல்கலைக் கழக அணியில் விளையாட திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.



அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான இடையேயான போட்டி டிச.25 முதல் ஜன.2 வரை சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்தது. இதில் 180 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

இதில் பூப்பந்தாட்ட ( ஸ்டேட் சீனியர் சாம்பியன் ஷிப்) போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி மாணவிகே.பவித்ரா, ஜி.லாவண்யா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான போட்டி வரும் பிப்.15 முதல் பிப்.19 வரை கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் நடக்கிறது. இவர்களுக்கான பயிற்சிகள் நாளை (பிப்.3) சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கிறது.இதே கல்லுாரியை சேர்ந்த மாணவிகள் ஏ.ரம்ய பிரியதர்ஷினி, ஆர்.வான்மதி ஆகியோர் பூப்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...