பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் புதுச்சேரியில் வேளாண் பயிற்சி!!

ரையாம்புத்துார் கிராமத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும்
பிரான்ஸ் நாட்டின் மாணவர்கள் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.அதன்படி இந்தாண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 மாணவர்கள், பேராசிரியர் புஷ்பராஜ், டாக்டர் பார்த்தசாரதி தலைமையில் 5 நாள் பயிற்சிக்காக கரையாம்புத்துார் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.கரையாம்புத்துார் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரது நிலத்தில், நீடித்து நிலைத்த கரும்பு விவசாய பண்ணையம், இயற்கை முறையில் பயிரிடப்படும் வீட்டுத்தோட்டம் ஆகியவற்றை நேற்று பார்வையிட்டனர். தொடர்ந்து பனையடிக்குப்பம் கிராமத்தில் மீன்குட்டையை பார்வையிட்டு உள்நாட்டு மீன் வளர்க்கும் முறைகள் குறித்து பயின்றனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை, களப்பணியாளர்கள் ராமமூர்த்தி, ஆத்மா மேலாளர் பக்தவச்சலம், கோகுலா ஆகியோர் செய்திருந்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...