அமெரிக்க பள்ளி அளவில் நடந்த செஸ் போட்டியில் சேம்பியன் பட்டம் பெற்ற தமிழ் மாணவர்!!!

பிலடெல்பியா ( அமெரிக்கா ) : தமிழ்நாட்டின் வாலாஜாபேட்டையை சேர்ந்த கார்த்திக் முருகன் என்ற மாணவர், அமெரிக்காவில் பள்ளி அளவில் நடந்த செஸ் போட்டியில் சேம்பியன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது பிலடெல்லியாவில் வசித்து வரும் 11 வயது கார்த்திக்,அங்குள்ள

பிக்கரிங் வேலி எலிமென்ட்ரி ஸ்கூலில் 5 வது கிரேட் படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று பால்டிமோர் நகரில் நடந்த 9 வது கிரேட்டர் மிட் - அட்லாண்டிக் ( பள்ளி அளவிலான ) செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட கார்த்திக், அதில் சேம்பியன் பட்டம் பெற்றார். மேரிலேண்ட் செஸ் அசோசியேஷனால் நடத்தப்பட்ட இந்த செஸ் போட்டிகள், காஸ்பரோவ் செஸ் பவுன்டேஷன் ஸ்பான்சருடன் நடத்தப்பட்டது.
மத்திய அட்லாண்டிக் மாநிலங்களான வாஷிங்டன் டிசி, டெலவேர், மேரிலேண்ட், நியுஜெர்சி, பெல்சில்வேனியா மற்றும் விர்ஜினியாவை சேர்ந்த 255 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கே-5 சேம்பியன்ஷிப் பிரிவில் விளையாடிய கார்த்திக், 5 போட்டிகளில் விளையாடி, 4.5 புள்ளிகள் பெற்று சேம்பியன் ஆனார். கடந்த 2 ஆண்டுகளாக செஸ் விளையாடி வரும் கார்த்திக் பல போட்டிகளில் வெற்றி பெற்று ரேட்டிங்கில் உயர்நிலையில் இருக்கிறார். இவர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றதை அமெரிக்காவில் வெளிவரும் யுஎஸ்ஏ டுடே பத்திரிக்கை, தனது லோக்கல் செய்தி பிரிவில் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...