டி.என்.பி.எஸ்.சி., பதவிகள் அரசு அலுவலர் சங்கம் நிபந்தனை !!

திண்டுக்கல், 'டி.என்.பி.எஸ்.சி.,யில், அரசியல்வாதிகள் உறுப்பினராக இருக்கக் கூடாது' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:அரசு அலுவலர்களின் வீட்டு வாடகை படி தொகையை, சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும். போக்குவரத்து படி, கல்விக்கடனை
உயர்த்தி வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும், இரண்டு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழுவில், அரசியல்வாதிகள், பதவியில் இருப்பவர்கள், உறுப்பினராக இருக்கக் கூடாது. அவர்களுக்கு பதில், ஓய்வு பெற்ற நீதிபதிகள், நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதன் மூலம் பணி நியமன முறைகேடுகளை தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...