சட்டசபையில், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூவத்துார் விடுதியில் தங்கியிருந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரி, தொகுதி மக்கள், சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர்.
மக்கள் கருத்தை மதித்து, கோவை மாவட்டத் தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம், மேட்டுப்
பாளையம் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் மனம் மாறினர்.தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு புறம்பாக, கோவை தெற்கு, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, சூலுார், வால்பாறை, பொள்ளாச்சி தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.
சமூக வலைதளங்கள்
இதனால் கொந்தளித்துள்ள கோவை மக்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான அதிருப்தியை, சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்ற னர். இதையடுத்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. சுகுணா புரத்தில் அமைச்சர் வேலுமணி யின் வீடு, ஆர்.எஸ். புரத்தில் கட்சி அலுவலகம், திப்பம்பட்டி யில் துணை சபாநாயகர் ஜெயராமன் வீடு மற்றும் கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, எம்.எல்.ஏ.,க்களின் வீடுகள் மற்றும் தொகுதி அலுவலகங்களில், பாதுகாப்புக்கு போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.பன்னீர்செல்வம் ஆதரவு நிலை எடுத்த கவுண்டம்பாளையம்,
எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம், எம்.எல்.ஏ., சின்னராஜ், ஓட்டெடுப்பை புறக்கணித்த வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் ஆகியோரது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
சேலத்தில் செருப்பு மாலை
சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., சக்திவேல், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி ஆதரவில்,
சீட்' வாங்கி ஜெயித்தவர். நேற்று மதியம் வரை, அவர் சேலம் திரும்பவில்லை. அவருக்கு,
அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாபேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை பைக்கில் வந்த இருவர், சக்திவேல் வீட்டின் கேட்டில், செருப்பு மாலை அணிவித்து சென்று விட்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக செருப்பு மாலையை கழற்றி விட்டு, சம்பவம் நடக்காதது போல் இருந்தனர். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
ஆனால், உளவுத்துறை போலீசார் அளித்த தகவல்படி, எம்.எல்.ஏ., சக்திவேல், சேலம் எம்.பி., பன்னீர்செல்வம் வீடுகளுக்கு, கூடுதல் பாது காப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்று மாலை, சக்திவேல் வீட்டை, தி.மு.க., மகளிர் அணியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை யிட்டனர்.
அப்போது, 'எம்.எல்.ஏ.,வை காணவில்லை' என, கூச்சலிட்டனர்.தொடர்ந்து, வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அம்மா பேட்டை போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர். இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், 'முதல்வரின் சொந்த மாவட்டத் தில், எதிர்ப்பு கிளம்பியதாக வெளியே தெரிந் தால், தமிழகம் முழுவதும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கான எதிர்ப்பு அதிகரிக்கும் என்பதால், இச்சம்பவத்தை மறைக்க, போலீசார் முயற்சிக்கின்றனர்' என்றனர்.
தற்போது, சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் தங்கியுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை, சேலம் திரும்ப வேண்டாம் என, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தெரிவித்துள் ளார். பிப்., 22க்கு பின், அவர்கள், சேலம் திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வீடுகளில் கறுப்பு கொடி
தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி அ.தி. மு.க., - எம்.எல்.ஏ., கதிர்காமுவை கண்டித்து, நேற்று வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, கறுப்பு கொடிகளை கழற்றினர்.