உளவுத்துறை ஐ.ஜி., பொறுப்பேற்க, அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதால், அரசுக்கு வந்து சேர வேண்டிய ரகசிய தகவல்கள் முழுமையாக வந்து சேருவதில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:உளவுத் துறை ஐ.ஜி.,யாக இருப்பவர், அரசுக்கு ஆதரவாகவும்;
ஏஎதிர்ப்பாகவும் நடக்கும் அத்தனை விஷயங்களையும் முன் கூட்டியே கணித்து, தவகல் திரட்டி, ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைப்பர். இதை வைத்து, அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆட்சி நிர்வாகம் சீராக நடக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.இதனால், இந்தப் பதவிக்கு வரக் கூடியவர்களுக்கு, ரகசியமாக தகவல்களை திரட்டக் கூடிய அளவுக்கு, எல்லா தரப்பு மக்களிடமும் தொடர்பு இருக்க வேண்டும். குறிப்பாக, கீழ் நிலையில், இந்த பிரிவிலேயே நீண்ட நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
சாதகமான அதிகாரிகள்:
ஆனால், அரசியல் ரீதியில் தேவையான தகவல்களைத் திரட்டித் தருபவர்களை மட்டும், அந்தப் பதவியில் நியமித்துக் கொள்வதை வாடிக்கையாக்கி விட்டனர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள். இதனால், அரசியல் ரீதியில் ஆட்சி அதிகாரத்திற்கு எதிர்ப்பாக செயல்படுபவர்களையும் கண்காணிப்பதோடு அவர்களுக்கு சில சிக்கல்களையும், இந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏற்படுத்தி வந்தனர். இதனால், இந்தப் பொறுப்பில் இருப்பவர்கள், கடுமையான விரோதங்களையும் சந்திப்பது வாடிக்கையாகி இருக்கிறது.
இது குறித்து, உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தாலும், அவரை வழிநடத்தும் பொறுப்பு அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலரான தினகரன் ஆகியோரிடம் உள்ளது. தினந்தோறும், தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்படும் முக்கியத் தகவல்கள் அனைத்தையும் டெய்லி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் என்று சொல்லக்கூடிய டி.எஸ்.ஆர்., ரிப்போர்ட்டை, முதல்வருக்கு, உளவுத் துறை தலைவர் அனுப்பி வைப்பார். அந்த ரிப்போர்ட்டை இப்போது, முதல்வரை கட்டுப்படுத்தும் சக்திகளுக்கும் அனுப்ப வேண்டிய, இக்கட்டான சூழல், உளவுத் துறை தலைவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சட்ட விரோதமாக செயல்பட, உளவுத்துறை தலைவராக இருப்பவர்கள் விருப்பப்படுவதில்லை. நாளையே, சிக்கல் என்றால், அதை எப்படி சந்திப்பது என்ற பயமும், தயக்கமும்தான் இதற்குக் காரணம். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, உளவுத் துறை தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட டேவிட்சன், அக்காரியத்தை செய்ய மறுத்ததாலேயே, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக, இப்படி உளவுத் துறை பொறுப்பில் இருந்து யாரும் விடுவிக்கப்பட்டால், அந்தப் பொறுப்புக்கு உடனடியாக வேறு யாராவது நியமிக்கப்படுவர். சமீப காலமாக, அப்படி இல்லை. காரணம், யாரும் இந்தப் பொறுப்புக்கு வர தயக்கம் காட்டுவதுதான். இருந்தாலும், ஆட்சி மேலிடத்தில், தாமரைக்கண்ணன், செந்தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோரது பெயர்கள் ஆலோசிக்கப்படுகின்றன. துவக்கத்தில் மூவருமே, அந்தப் பொறுப்புக்கு வர ஆசைப்பட்டவர்கள்தான். தற்போதைய சூழலில், சிக்கல் வரும் என்பதால், அவர்கள், தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.