சபாநாயகர் செயல்படவில்லை : கட்ஜூ

தமிழக சட்டசபை நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம் செய்துள்ளார்.

சட்டசபையில் இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ஓ.பி.எஸ். ஆதரவு அணியினர் மட்டுமே இருந்துள்ளனர்.
உறுப்பினர்கள் தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடந்துள்ளது. அதில், பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.,க்களும், எதிராக 11 எம்.எல்.ஏ.,க்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சபாநாயகர் சரியாகச் செயல்படவில்லை. 11 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது என அவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...