ஜெ., நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி : பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டார் குற்றவாளி சசிகலா
*சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சென்னை போயஸ்தோட்டத்தில் இருந்து புறப்பட்டார். பெங்களூரு புறப்படும் முன் மெரினாவில் உள்ள மறைந்த
ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற அவர், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின் ஏதோ ஆவேசமாக கூறியபடி சமாதியை தனது கையால் அடித்து சபதம் ஏற்றார். முன்னதாக சரணடைய மேலும் கால அவகாசம் கேட்ட சசிகலா தரப்பினரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததையடுத்து சசிகலா பெங்களூரு புறப்பட்டார். இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதால் சசிகலா உட்பட 3 பேரும் பெங்களூரு புறப்பட்டனர். சாலை மார்க்கமாக சசிகலா பெங்களூரு செல்கிறார்.