மேகதாது விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் !!

மேதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவுக்கு தொழில்நுட்ப உதவி செய்யக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.



அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது, "மேகதாதுவில் ரூ.5,921 கோடி மதிப்பில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ளது. மேகதாதுவில் அணை கட்டும், கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் உள்பட சக மாநிலங்களின் ஒப்புதலின்றி, கர்நாடகா தன்னிச்சையாக முயற்சி செய்கிறது. குறிப்பாக தமிழகத்தை பாதிக்கும், கர்நாடகாவின் எந்த திட்டத்துக்கும் அனுமதி வழங்கக் கூடாது" என கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...