மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியம்,ஊ.ஒ.து.பள்ளி,வலையர்சக்குடியில் ரூபெல்லா தடுப்பூசி எங்கள் குழந்தைகளுக்கு போஆட வேண்டாம் அங்கே பத்து குழந்தைகள் இறந்துவிட்டனர்,இங்கே மூன்று குழந்தைகள் இறந்துவிட்டனர்,என முதல் நாளே பெரும் ஆரவராத்தோடு பொதுமக்கள் ஆசிரியர்களிடம் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்,ஆனால் தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மன உறுதியுடன் இந்த
தடுப்பூசினால் எந்த பாதிப்பும் இல்லை அதற்கு நாங்கள் பொறுப்பு , மாணவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள் எனவே எந்த பயமும் வேண்டாம் என்று உறுதி கூறி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 07.02.2017 ல் தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று அனைத்து மாணவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டது.ஒரு நாளைக்கும் மேலாக ஆகியும் அனைத்து மாணவர்களும் நன்றாகத்தான் உள்ளனர்.எனவே பெற்றோர் யாரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்.ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் என அனைவரும் இந்த ஊசியை அவசியம் போட்டு கொள்ள வேண்டும்.இப்போது போடும் தடுப்பூசி பெண் குழந்தைகளுக்கு கர்ப்ப காலத்தில் நல்ல தடுப்பு மருந்தாக செயல்படும்.இந்த தடுப்பூசி போட்டுகொண்டு நல்ல உடல் நலத்துடன் உள்ள இப்பள்ளி மாணவர்களின் வாயிலாக பெற்றோர்கள்,பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு வெளியிடப்படுகிறது.வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்... மருத்துவர்களின் ஆலோசனை படி செயல்பட்டால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது...!