இன்று ஆஸ்கார் விருது வழங்கும் விழா !!

 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (பிப்.,26), சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 89 வது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த திரை பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். அமெரிக்க நேரப்படி மாலை 5.30

மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது. ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் பிப்ரவரி 24ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதிகபட்சமாக "லா லா லேண்ட்" என்ற படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்சனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'அரைவல்' படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...