தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், நடப்பு நிதியாண்டில், ஒரே ஒரு முறை மட்டுமே சிண்டிகேட் கூட்டம் நடந்துள்ளது. 10 மாதங்கள் கூட்டம் நடத்தப்படாததால், மாணவர்கள், பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தராக முன்னர் பதவி வகித்த சந்திரகலா ஜெயபாலன், பல்கலையின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சி எடுத்தார். பல்கலைக்கான அங்கீகாரம் பிரச்னையான போது, அதை சமாளித்து, அங்கீகாரம் பெற்றதுடன், புதிதாக, 63 பாடப்பிரிவுகளையும் துவக்கினார்.
அத்துடன், பல்கலைகழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மானியம் கிடைக்கும் வகையில், '12 பி' அந்தஸ்தையும் பெற்றுத் தந்தார். அவரின் பதவிக்காலம் முடிந்த பின், கோவை வேளாண் பல்கலை பேராசிரியரான பாஸ்கரன், துணைவேந்தராக பொறுப்பேற்றார்.
பாஸ்கரன் பொறுப்பேற்ற பின், பல முறைகேடு புகார்களும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனால், திறந்த நிலை பல்கலையில் மாணவர்கள் சேர, தயக்கம் காட்டும் நிலை உள்ளது.
பல்கலை நிர்வாகத்தை முறையாக நடத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தவும், பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தை, மாதம் தோறும் நடத்த வேண்டும். ஆனால், நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதத்தில் மட்டுமே கூட்டம் நடந்துள்ளது; மற்ற மாதங்களில் நடைபெறவில்லை.
இதுகுறித்து, பேராசிரியர்களும், மாணவர்களும் கூறியதாவது:சிண்டிகேட்டில், அனுமதி பெற வேண்டிய கோப்புகளுக்கு, சில உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி, பல்கலை நிர்வாகம் சமாளிக்கிறது.இதே நிலை தொடர்ந்தால், சிண்டிகேட் கமிட்டியை கலைக்க வாய்ப்புள்ளது. அப்படி கலைத்தால், கேள்வி கேட்க ஆளின்றி, முறைகேடுகள் இன்னும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.-