ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது? - என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் !!

ஆளுநர் வித்தியாசாகர் இன்று வெளியிடும் முக்கிய அறிவிப்பின் மூலம், தமிழக அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்._

_ஆளுநர் அறிவிப்பில் நான் (செய்திக்கதிர்) தகவல்களை கேட்டதுபடி, மூன்று விஷயங்கள் இடம்பெற சாத்தியக் கூறுகள் இருக்கின்றன._


_1. அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது. பதவியேற்பு இன்றோ அல்லது ஓரிரு நாளில் நடைபெறலாம். மேலும், குறைந்தது 2 வார அவகாசம் அளித்து, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம்._

_ஆனால், இப்படி நடந்தால் குதிரை பேரம் நிச்சயம் நடைபெறும் என்பதும் கவனிக்கத்தக்கது._

_2. காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். பேரவையில், பெரும்பான்மைக்கான போட்டி நடந்தால், அப்போது ஓ.பி.எஸ் தமது பலத்தை நிரூபிக்கலாம்._

_3. மாறாக, ஓ.பி.எஸ். ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டு, ஓ.பி.எஸ் அணி, பழனிச்சாமி அணியை பேரவையில் முதலில்  பெரும்பான்மையை நிரூபித்து யாராவது ஒருவர் அரியாசனத்தில் அமரும் வகையிலான வாய்ப்பு இருக்கிறது. இதுவே பிரதானமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது._

*மேற்கண்ட வாய்ப்புகள் நடந்தேறலாம் இன்றைய அறிவிப்பில்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...