பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கவர்னர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார். அறிக்கை அனுப்பி வைப்பு : இதனையடுத்து,
சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டசபை செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பிப்ரவரி 20 ம் தேதி கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை அளித்தார். இந்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார். சட்டசபை நிழக்வுகள் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாளை நேரம் கேட்டுள்ளார். அவர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ள நிலையில், இந்த அறிக்கை அனுப்பப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.