தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அல்லது நாளை தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா, “எல்லாரையும் போல நானும் ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேன். இது போன்ற சூழல்களை சந்திக்கும் திறன் பெற்றவர் வித்யாசாகர் ராவ். இந்த விவகாரத்தில் அவர் சட்டப்படி சரியான முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்மையாக நடந்துகொண்டவர் என்றும் பன்னீர்செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறமுடியாது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.