இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமுரண்பாட்டை களையகோரி உயிர்துறக்கும் போராட்டத்தில் வெற்றி பெற்ற நாள் இன்று !!!


                 

*கடந்தாண்டு இதே நாளில்*....

 *கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 20 முதல் 27 ஆம் தேதிவரை காலவறையற்ற உயிர்துறக்கும் உண்ணாவிரதப் போராட்டம் SSTA அமைப்பினரால் மாநில தலைநகரில் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் 8 நாட்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்,பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் என எண்ணற்ற நல்லுள்ளங்கள் பங்கேற்று போராட்டத்தின் வெற்றிக்கு உதவினர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் போராட்டக்களத்திற்கு வந்து பங்கேற்றதால் போராட்டத்தின் தீவிர நிலையை உணர்ந்த அரசு பள்ளிக்கல்வி செயலரின் அனுமதியோடு ,தொடக்கக் கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சு வார்த்தை முடிவில் 2009 க்கு பிறகு பணியமர்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் ஊதியம் 7 வது ஊதியக்குழுவில் இன்னும் மிக்கடுமையாக பாதிக்கப்பட்டு                    * 2009 ல் நியமிக்கப்பட்டவர்கள் -2400 லும்.                                                                         * TET தேர்வாளர்கள் -2000 தரக்கட்டிலும் நிர்ணயிக்கப்பட்டு  இன்னும் ஊதியக்குறைப்பு ஏற்பட்டு பேராபத்தில் முடியும் ,என ஆதாரப்பூர்வமாக தெள்ள தெளிவாக SSTA பொதுச் செயலர் - திரு .ராபர்ட் விளக்கியதை அடுத்து அரசு தரப்பில் 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் ஊதியமுரண்பாடு களைய  பரிந்துரை செய்யப்படும் என்ன எழுத்துப்பூர்வமான உத்திரவாதத்தையும் அளித்தது.

*🌹இதே நாளில் பிப்ரவரி-27 ல் தான் SSTAவின் 8வது (இறுதிநாள்போராட்டம்)  நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்ததுமட்டுமல்லாமல் இடைநிலை ஆசிரியர்களுக்காக தமிழகத்தில் வேறுஎந்த இயக்கமும் பெற்றிடாத எழுத்துப்பூர்வமான உத்திரவாதத்தையும் பெற்றுள்ளது என்பதை ஆசிரியர்களுக்காக நன்றியோடு நினைவுகூர்கின்றோம்...                    இதற்கு உதவி கல்வித்துறை உயர்அதிகாரிகளுக்கும் ,காவல்துறை உயர்அதிகாரிகளையும் நன்றியோடு நினைவூகூர்கிறோம்....                                                                                                    உறவுக்கு தோல் கொடுப்போம் !!!                                                                             உரிமைக்கு உயிர் கொடுப்போம் !!!          
 நன்றி!!

   *🌹SSTA*
*மாநில அமைப்பு.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...