எம்.எல்.ஏ.,க்களை மீட்கக் கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக எம்.எல்.ஏ.,க்களை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரத்தால் கட்சி இரண்டு அணியாகப் பிரிந்துள்ளது. இதில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு
மாறாமல் இருக்க கூவத்தூர் சொகுசு விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் இளவரசன், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள ஆர்.டி.ராமச்சந்திரன் 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அதன்பின், அவரைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல, கிருஷ்ணராஜபுரம் எம்.எல்.ஏ., கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, உறவினர் பிரித்தா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தற்போது எம்.எல்.ஏ.,க்கள் எங்கு உள்ளனர்? என்று அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்கள். மேலும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் அந்த சொகுசு விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 94 பேர் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக காணாமல்போனதாகக் கூறப்பட்ட குன்னம் ராமச்சந்திரன், கிருஷ்ணராஜபுரம் கீதா ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்களின் வாக்குமூலமும் சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் சுதந்திரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் கையெழுத்து அதில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...