சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், ஆட்சிக்கு சிக்கல் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை
சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர்.
சட்டசபைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால், சபாநாயகர், 'கூடுதலாக, 100 அல்லது 200 காவலர்கள் தேவை' என, கடிதம் அனுப்புவார். அதனடிப்படையில், போலீஸ் கமிஷனர், காவலர்களை அனுப்புவார். ஆனால், இம்முறை போலீஸ் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை அனுப்பும்படி கடிதம் எழுதப்பப்பட்டு உள்ளது; இதுவும் விதிமீறல்.
சபை காவலர்கள், சட்டசபை அரங்கிற்கு வெளியே நிற்க வேண்டும். சபாநாயகர் அழைத்தால் மட்டுமே, உள்ளே செல்ல வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்றும்படி, சபைகாவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.
கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து
சபை காவலர்களால், அவர்களை வெளியேற்ற முடியவில்லை. சபையை ஒத்தி வைத்து, சபாநாயகர் வெளியேறினார். அதன்பின், கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றினர். சபாநாயகர் இல்லாத போது, காவலர்கள் உள்ளே நுழைந்ததும் விதிமீறல்.
சபாநாயகர் இருக்கும் போது மட்டுமே, உறுப்பினர்கள் வெளியேற்றம் என்பது நடைபெற வேண்டும். மேலும், சபாநாயகர் ஒட்டுமொத்தமாக, அனைவரையும் வெளியேற்றுங்கள் என கூறுவதும், விதிமீறலே. அவர், தவறு செய்த உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டே, வெளியேற்றும்படி உத்தரவிட வேண்டும்; அதை, அவர்பின்பற்றவில்லை.
இதே போல், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போது, பெயர் குறிப்பிடாததால், சபையில் இல்லாதவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ரகசிய ஓட்டெடுப்பு
இதை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கு,உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு பதில் கூற முடியாமல், அரசு தவித்து வருகிறது. இச்சூழ்நிலையில், மீண்டும் விதிமீறல்கள் நடந்துள்ளன.
சட்டசபையில், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் என, நான்கு கட்சிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள, மூன்று கட்சிகளும், 'ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஓட்டெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்' என, வலியுறுத்தின.
இதை, ஏன் சபாநாயகர் பரிசீலனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு சென்றால், ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.