மதிப்பிழந்த பணத்தை எண்ணும் ரிசர்வ் வங்கி!

பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் எவ்வளவு என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் கணக்கிட்டுக்கொண்டிருப்பதாக அதன் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.



நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கம் ஆகியவற்றை ஒழித்துக்கட்டும் விதமாக புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவை செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு மக்கள் தங்களிடமிருந்த மதிப்பிழந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். மொத்த நோட்டுகளில் 86 சதவிகிதம் அளவிலான இந்நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கு கால அவகாசம் (டிசம்பர் 30) வழங்கப்பட்டிருந்தது. மேலும், மதிப்பிழந்த இந்நோட்டுகளுக்கு மாற்றாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரிசர்வ் வங்கியால் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கூறப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம் எவ்வளவு பணம் டெபபசிட் செய்யப்பட்டது? அதில் எவ்வளவு பணத்துக்கு முறையான கணக்குகள் உள்ளன? கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டனவா? கறுப்புப் பணம் அனைத்தும் கண்டறியப்பட்டனவா? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடையே உள்ளன. ஆனால், டெபாசிட் காலம் முடிவடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுகுறித்த முழுமையான விவரங்களை ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடாமல் உள்ளது. (ரிசர்வ் வங்கியில் இந்த மதிப்பிழந்த நோட்டுகளை செலுத்துவதற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது)

இதுபற்றி ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் கூறுகையில், “எவ்வளவு அளவிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பன குறித்த முழு விவரங்களை வெளியிடுவதற்கு முன்னர் நாங்கள் பல்வேறு கணக்கீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னரே சரியான விவரங்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...