ராஜ்பவன் முற்றுகை போராட்டம் : விவசாயிகள் சங்கம் முடிவு !!

''வறட்சியால் இறந்த, 275 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, மார்ச், 10ல், கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் கூறினார்.


சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில், 140 ஆண்டுகளுக்கு பின், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது; மாநிலம் பேரழிவை எதிர்நோக்கி உள்ளது. பயிர்கள் கருகுவதை பார்த்து மனமுடைந்து, இதுவரை, 275 விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அடைந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு, அரசு இதுவரை உரிய நிவாரணம் அறிவிக்கவில்லை.காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைத்தால் தான், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும். இதை அமைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவை, கர்நாடக அரசு கிடப்பில் போட்டுள்ளது. காவிரியின் குறுக்கே, மேகதாது, ராசிமணல் போன்ற இடங்களில், அணை கட்டும் ஏற்பாடுகளையும், கர்நாடகா துவங்கி உள்ளது. இதை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக, மார்ச், 10ல், கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். வறட்சியால் இறந்த, 275 விவசாயிகளின் புகைப்படங்களும், கவர்னர் மாளிகைக்கு வெளியே, அன்று திறக்கப்படும். இவ்வாறு பாண்டியன் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...