ஆந்திர மாநில அரசியலில் திடீர் திருப்பம் : மாமனாரின் வாரிசுகளை ஓரங்கட்டிய சந்திரபாபு நாயுடு !!

தமிழக அரசியலில் காங்கிரஸ் பேரியக்கத்தை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டிய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கு உண்டு. அவருக்கு பிறகு 50 ஆண்டுகாலம் திராவிட இயக்கங்களிடம் இருந்து தமிழகத்தை பிரிக்க முடியாமல் ேதசிய கட்சிகள் விழிபிதுங்கி நிற்கின்றன.  அத்தகைய ஒரு அரசியல் மாற்றத்தை ஒருங்கிணைந்த ஆந்திராவில்
ஏற்படுத்தியவர் அங்கு கிருஷ்ணனாக, ராமனாக மக்களால் போற்றப்பட்ட நடிகர் என்.டி.ஆர். நாதமூரி தாரக ராமராவ் என்று அழைக்கப்படும் இவர், ஆந்திராவில் அதுவரை அசைக்க முடியாத காங்கிரசின் மாயையை தகர்த்து தெலுங்குதேச கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

அப்போது தெலுங்குதேச கட்சியில் மாமனாருடன் இணைந்து செயல்பட்டு வந்த அவரது மருமகன் சந்திரபாபுநாயுடு அதிரடியாக அவரை ஓரம் கட்டி கட்சியை பிளந்து ஆட்சியை கைப்பற்றினார். ஆட்சியை கைப்பற்றியவுடன் அதிரடியாக ஆந்திர மாநிலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். மாநிலமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் சந்திரபாபுநாயுடுவின் மக்கள் செல்வாக்கும் கூடியது.
இவரது செல்வாக்கை உடைத்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. இதற்காக அதிரடி அரசியலுக்கு பேர் போன ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியை களம் இறக்கி அதில் வெற்றியும் பெற்றது. அவரது மறைவுக்கு பின் மீண்டும் தெலுங்குதேசமே ஆட்சியை கைப்பற்றியது. சந்திரபாபுநாயுடுவே முதல்வராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா என்ற தனி மாநிலம் பிரிந்து சென்றது. தனி மாநிலமாக தெலங்கானா பிரிந்ததால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு ஆந்திரத்துக்கு பேக்கேஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. வேறு வழியின்றி சந்திரபாபுநாயுடுவும் பேக்கேஜ் திட்டத்தின் கீழ் வரும் நிதியை பயன்படுத்தி ஆந்திரத்தில் பல்வேறு அதிரடி மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் தெலுங்குதேசம் கட்சியில் தங்கள் தந்தைக்கு பிறகு தங்களுக்கு எந்த பிடிமானத்தையும் வழங்காமல் சந்திரபாபுநாயுடு செயல்பட்டு வருவது அவரது வாரிசுகளான பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பாலகிருஷ்ணா வெறும் இந்துப்பூர் தொகுதி எம்எல்ஏவாக மட்டுமே உள்ளார்.

இவர்களை ஓரங்கட்டதனது மகன் நாரா லோகேஷை 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் களத்தில் இறக்கினார் சந்திரபாபு நாயுடு.அதேநேரத்தில் ஆந்திராவில் ஆளுங்கட்சியாகவும், தெலங்கானாவில் எதிர்க்கட்சியாகவும் மாறுபட்ட நிலைகளை எடுக்க வேண்டி இருப்பதால் அங்கு தனது கட்சியை முழுமையாக அங்குள்ளவர்களை கொண்டே வழிநடத்தும் நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நிலையில் ஆந்திரத்தில் எம்எல்சி தேர்தலில் தனது மகன் லோகேஷை போட்டியிட வைத்து தேர்ந்தெடுத்து அமைச்சரவையில் இணைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் என்டிஆர் வாரிசுகளை முழுவதுமாக ஓரம் கட்டி தனது குடும்பமே முதன்மையானது என்பதை அவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தவும் செய்துள்ளார். மற்றொருபுறம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு வரும் எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க மாநில நதிகளை இணைக்கும் திட்டங்களை வேகப்படுத்தி வருகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை விட பேக்கேஜ் திட்டமே மேலானது என்பதை வலியுறுத்த இதுவரை ₹10.50 லட்சம் கோடி முதலீடுகளை மாநிலத்துக்கு பெற்றுள்ளார்.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல் என பல்வேறு தொழில்நிறுவனங்கள் ஆந்திரத்தில் கால் பதிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தனது இந்த நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த தனது மகன் லோகேஷ் தலைமையில் கட்சியினரை களம் இறக்கியும், தகவல் தொழில்நுட்பம் மூலம் பிரசாரம் செய்யவும் முடுக்கி விட்டுள்ளார்.
இதை எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகளும் நதிநீர் இணைப்பு திட்டங்களான ஹந்திரி-நீவா-காலேரி நகரி திட்டம் ஒய்எஸ்ஆர் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மேலும் வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் அதை இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றனர் என்று பிரசாரம் செய்து வருகின்றன.

ஆனால், இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதற்குள் ஆந்திர தலைநகர் அமராவதியை கட்டமைத்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நதிநீர் இணைப்புத்திட்டங்களை முழுமையாக முடித்து விடுவது என்று உட்கட்டமைப்பு பணிகளை முடித்து மீண்டும் ஆட்சியை பிடித்து அதில் தனது மகன் லோகேஷை பிரதானமாக அமரவைப்பது என்ற இலக்கை நோக்கி சந்திரபாபுநாயுடு வரிந்து கட்டிக்கொண்டு நடைபோட்டு வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...