*சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:*
பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் பிரச்னையை கவர்னர் திறமையாக கையாண்டார்.
*தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி:*இந்த தீர்ப்பு சட்டத்தை நிலைநிறுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். உடனடியாக கவர்னர் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
*பா.ம.க.,வின் இளைஞரணி தலைவர் அன்புமணி:*இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதற்காக ஆச்சார்யாவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். பல நெருக்கடிக்கு மத்தியில் வாதாடி தீர்ப்பை பெற்றுள்ளார்.
*இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்:*தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்த தீர்ப்பு பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு நல்லபாடம்
*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் சீதாராம்யெச்சூரி:*சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான தீர்ப்பு. தீர்ப்பு மூலம் சசிகலா 4 வருடம் சிறை செல்வார். தமிழக அரசியலில் உள்ள குழப்பம் நீங்கியது.
*பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:*
சசிகலாவுக்கு தண்டனை உறுதியானதால் பேராபத்தில் இருந்து தமிழகம் தப்பியது. பொது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமையும்.
*தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்:*சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இறுதியானது. ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும். தவறு செய்பவர்களுக்கு எச்சரிகையாகவும் பாடமாகவும் உள்ள தீர்ப்பு. இந்தியாவில் உள்ள ஆட்சி அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களை ஆட்சி அழைக்க வேண்டும்.
*த.மா.கா., தலைவர் வாசன்* குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் தப்பி விட முடியாது என்பதற்கு பாடம். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
*பா.ஜ.,வின் எச்.ராஜா,* கவர்னர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றார்.
*நடிகர் டி.ஆர்.* கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. ஜெ.,வின் ஆன்மாவுக்கு கிடைத்த வெற்றி.