வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன !!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF - பிபிஎப்)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதம் பரிந்துரைத்த போதிலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது

மூத்த குடிமக்கள் 'சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு அரசு 8.1 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டி விகிதம்
அளிக்கப்பட்டு இருந்தாலும் 8.5 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகின்றது. இதுவே வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
என்எஸ்சி எனப்படும் 5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று இருந்தாலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

5 வருட டெர்ம் டெபாசிட்
ஐந்து வருட டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டு பரிந்துரைத்துள்ளது. ஆனால் 7.8 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபமாக அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

1 வருட டெர்ம் டெபாசிட்
ஒரு வருட டெர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு 7 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, அதற்கு ஏற்றவாறே 7 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படுகின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...