வி.கே. சசிகலா வழக்கில் சீராய்வு மனு பலன் தராது.. பி.வி.ஆச்சார்யா !!

சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில், பிழை எதுவும் இல்லை என்பதால் சீராய்வு மனு பலன் தராது என சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி என்பதால் இதில், மேல்முறையீடு செய்வதற்கான சட்ட நடைமுறைகள் இல்லை என கூறினார்.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது அரசியலமைப்பு அமர்வில் முறையிட முடியாது. ஆனால், தீர்ப்பில் ஏதேனும் வெளிப்படையான பிழை இருந்தால் அதை சரிசெய்ய சீராய்வு மனு தாக்கல் ‌செய்யலாம். அப்படி இல்லாதபட்சத்தில் சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த வழக்கின் தீர்ப்பில் பிழை எதுவும் இல்லை. ஆகையால், சீராய்வு மனு பலன் தராது. அவர்கள் மனுத் தாக்கல் செய்தாலும், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...